அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் இ. கோட்டைப்பட்டியில் அதிமுக கழக அம்மா பேரவை சார்பில் 100 திருக்கோவில் சிறப்பு பிரார்த்தனையோடு 100 இடங்களில் அன்னதானம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து வழங்கினார்.
மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக நிரந்தர பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 ஆம் ஆண்டு மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட கோவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை கிராம அன்னதான விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில் 100 நாட்களில் 100 திருக்கோயிலில் 100 நாட்கள் சிறப்பு பிரார்த்தனையோடு கிராம அன்னதான திருவிழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இ. கோட்டைப் பட்டி கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் கிராம அன்னதானத் திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கி துவக்கி வைத்தார்
முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் இ. கோட்டைப் பட்டியில் பகுதிகளை 50க்கு மேற்பட்ட கிரிக்கெட் அணியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு பொன்னாடை அணிவித்து விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். இவ்விழாவில் மாநில அமைப்பு செயலாளர் இ மகேந்திரன் தேனி நாராயணசாமி நாயுடு மாநில பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் மகேந்திர பாண்டி வழக்கறிஞர் சுதாகரன் ஒன்றிய செயலாளர் பிச்சை ராசன் எம் வி பி ராஜா நகரச் செயலாளர் பூமா ராஜா செல்லம்பட்டி ரகு ராசுக்காளை ஜெயராமன் எழுமலை வாசிமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.