மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டக் கிளை தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5ஆவது வட்டக் கிளை மாநாடு முத்துசாமி நினைவரங்கம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் உசிலம்பட்டி வட்டக்கிளை இணைச் செயலாளர் கே பழனி தலைமையில் இணைச் செயலாளர்கள் ஆசைத்தம்பி, அக்கினி, பாண்டி ஆகியோர் முன்னிலையில் செயற்குழு உறுப்பினர் அய்யங்காளை வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாவட்ட பொருளாளர் ஜெயராமன் வட்டக்கிளை செயலாளர் கே மகேஸ்வரன் வட்டாட்சியர் ஓய்வு மாணிக்கம் அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மனோகரன் வட்ட கிளை தலைவர் முத்துமணி பாண்டியம்மாள் ஜாக்டோ ஜியோ முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர் செல்வம் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றனர். கூட்டத்தில் வட்டக்கிளை துணைத் தலைவர் புஷ்பம் செயற்குழு உறுப்பினர்கள் இந்துமதி, ஜெயராஜ், ராஜபாண்டி, பூங்கொடி, கணேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் வட்டக் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து கட்டணம் சலுகை தேர்தல் வாக்குறுதி படி விரைவில் வழங்கிட தமிழக அரசே வலியுறுத்தியும்.
ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள் ஊர் புற நூலகர்கள் ஆகியோர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உசிலம்பட்டி வட்டக் கிளையின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்ற உசிலம்பட்டி நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கரையில் நடைமேடை அமைத்து அழகு படுத்துவதுடன் ஆக்கிரம்புகளை அகற்றி உசிலம்பட்டி நீர் நிலைகளின் முக்கியத்துவம் வழங்க கண்மாயில் தூர்வாரி சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
You must be logged in to post a comment.