மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பொதும்பு பகுதியில் விரிவாக்கப்பட்ட ஆவின் நகர் கௌதம் நகர் மற்றும் திருமலை நகர் பகுதியில் ஒருமுனை மின்சாரம் செயல்பட்டு வந்ததால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் இரவு நேரங்களில் அதிக அளவு நேரம் மின்சாரம் தடைபடும் சூழ்நிலையும் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின் நகர் பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சமயநல்லூர் மின் பகிர்மான குறைதீர் முகாமில் மின்வாரிய அதிகாரிகளிடம் மும்முனை மின்சாரம் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள மின்சார பிரச்சனை விரைவில் சரி செய்யப்பட வேண்டும் என்று மனு அளித்தனர். இதனை தொடர்ந்து பொதும்பு ஊராட்சி ஆவின் நகர் மற்றும் அருகில் உள்ள விரிவாக்க பகுதிகளின் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு செயற்பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையிலான மின்வாரிய அதிகாரிகள் ஆவின் நகர் ,குமரன் நகர், ஆனந்தம் அவன்யூ, பொதும்பு ,விஷால் நகர், எஸ் வி .டி. நகர் கோவில் பாப்பாக்குடி பகுதியில் மக்களின் மின்சார பிரச்சனை சரி செய்ய மூன்று மின்மாற்றிகளை அமைத்துக் கொடுத்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆவின் நகர் குடியிருப்பு வாசிகள் செயற்பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் கோபி கிருஷ்ணன், ஆகியோரை பாராட்டும் விதமாக தங்களின் குடியிருப்பு பகுதிகளில் சிறிய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்தனர் இதில் செயற்பொறியாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட மின்துறை அதிகாரிகளுக்கு
சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் தங்கள் பகுதியில் அதிக அளவு மின்கம்பங்கள் அமைத்துக் கொடுத்ததற்கும் பாராட்டு தெரிவித்தனர். இதில் ஆவின் நகர் மக்கள் சங்க தலைவர் காதர் உசேன், பொருளாளர் முத்து, செயலாளர் செந்தில்குமார் மற்றும் குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்

You must be logged in to post a comment.