மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில்வீடு, கிடை மாட்டுத் தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் நேற்று கணபதி பூஜையுடன் முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சியினை தொடங்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக நிகழ்ச்சி தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து அதிர் வேட்டுக்கள் மேளதாளம் முழங்க பக்தர்களின் விண்ணதிரும் கரகோஷத்துடன் கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலின் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் அறுசுவை அன்னதானத்தினை முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தொடங்கி வைத்து உணவு அருந்தினார் மதுரை மேற்கு தெற்குஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.