மதுரை மாவட்டம் சோழவந்தானில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது சோழவந்தானில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் ஊர்வலத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி மாணவ மாணவிகள் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர் முக்கியமாக சோழவந்தான் மார்க்கெட் ரோடு முத்துக்குமரன் நகை மாளிகை பகுதி திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி பெரிய கடை வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தில் காமராஜர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பெண்சாம் பள்ளி முதல்வர் கலைவாணி சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஆனந்த குமார் மற்றும் காவல் துறையினர் பள்ளி ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.