மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் எஸ்ஒஆர் தங்க பாண்டியன் நடிகர் விஜயை கடுமையாக சாடினார். கூட்டத்தில் அவர் பேசும் பொழுது:
நடிகர் அஜித்குமார் நடிகராய் இருந்து பலருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் விஜய் நடிகராக இருந்து யாருக்கு என்ன செய்தார் என்பது தெரிவிக்க வேண்டும். நடிகராக இருக்கும் போது எம்ஜிஆர் போல உதவி செய்தாயா? இல்லை விஜயகாந்த போல் சூர்யாவை போல் உதவி செய்தாயா? என குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சியில் நகர இளைஞரணி நிர்வாகிகள் சுஜேந்திரர், தினேஷ், ஜெயராமன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிரவின்நாத்மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி மாணவரணி தொண்டரணி பொறியாளர் அணி மற்றும் அனைத்து கழக சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கழக மூத்த முன்னணியினர் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…
முடிவில் சரவெடி சரவணன் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.