மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர்கள் சேர்க்கை மன்னாடி மங்கலத்தில் நடைபெற்றதுவாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , எம் வி கருப்பையா மாணிக்கம் ,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தனராஜன், மாவட்ட அணி நிர்வாகிகள் சரவணன் பாண்டி, சிவரக்கோட்டை ராஜா, சிவசக்தி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் துணைச் செயலாளர் தியாகு கருப்பட்டி கருப்பையா தங்கப்பாண்டி தென்கரை ராமலிங்கம் மற்றும் விருகை தர்மர், ஆனந்த் ஜெயக்குமார், துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ், அப்பாச்சி கண்ணன் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு சுரேஷ் அழகுமலை பி கே ஆர் மயில் ஜானகிராமன் எஸ்.பி கந்தன் ரமேஷ் ராஜா துரைப்பாண்டி வீரபாண்டி முத்துப்பாண்டி ஆனந்தகுமார் பங்கு ராஜ் குருவித்துறை வனிதா விஜய் பாபு காசிநாதன் ஆகியோர் பங்கேற்றனர் இளைஞர் அணி கேபிள் மணி நன்றியுரை ஆற்றினார்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் திறக்காமல் 5000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல செல்லம்பட்டி பகுதியில் 500 ஏக்கருக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது அங்கேயும் நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது, அரசு கொள்முதல் நிலையங்களில் தனியாருக்கு கொடுத்து விட்டனர் அந்த தனியார் சார்கள் யார்?
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படவில்லை, ஆனால் இன்றைக்கு விவசாயிகள் ரோட்டில் நெல்லை கொட்டி இருப்பது நமக்கு வேதனை அளிக்கிறது .இதே சோழவந்தான் தொகுதியில் 15 நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்ததை கூடுதலாக 40 நெல் கொள்முதல் நிலையம்உயர்த்தி தந்தோம்.அதிமுக ஆட்சியில் நெற்றில் வைக்கும் காலணா காசு கூட அதிமுக நிர்வாகிகள் விவசாயிகளிடம் வாங்கவில்லை.
அம்மா ஆட்சி காலத்தில் 2,136 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உடனுக்கு உடன் பணம் வழங்கப்பட்டது.கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டமைப்புகளை ஏற்படுத்திய தவறியதால் 840 கோடி மதிப்பில் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன.
கடந்த 2016 அம்மா ஆட்சியில் 5,319 கோடி ,2021 ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில் 12,110 கோடி என 17,429 கோடி ரூபாயை விவசாயிகள் வாங்கி கடனை ரத்து செய்தது அம்மாவின் அரசாகும்
எடப்பாடியார் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மட்டும 12,000 கோடி அளவில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது .ஆனால் ஸ்டாலின் இந்த நான்காண்டுகால திமுக ஆட்சியில் வெறும் 5 720 கோடி தான் வழங்கப்பட்டது.
வறட்சிக்காலங்களில் எந்த மாநில முதலமைச்சரும் வழங்காத நிலையில், 2,247 கோடியை வழங்கிய ஒரே முதலமைச்சர் அம்மா தான் . ஸ்டாலின் ஆட்சியில் வறட்சி நிவாரணமாக ஒரு பைசா கூட விவசாயிகளுக்கு வழங்கவில்லை
இன்றைக்கு வெற்றிலை விவசாயிகள் ,தென்னை விவசாயிகளை ஆகியோரை காக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து போராடி வருகிறார். இன்றைக்கு மக்களை சிந்திக்காத ஸ்டாலின் அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது.உலக பிரசித்தி பெற்ற இந்த சோழவந்தான் தொகுதியில் வருகின்ற தேர்தலில் மகத்தான வெற்றியை நீங்கள் பெற்றுத் தர வேண்டும் என்று கூறினார்.
You must be logged in to post a comment.