மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர் சோழவந்தானை அடுத்து தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி தென்கரை நாராயணபுரம் மலைப்பட்டி மேல மட்டையான் போன்ற கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைந்த நெல்கள் நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளது சுமார் 30 நாட்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்கள் சுமார் 5000க்கும் மேற்பட்ட மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது நெல் கொள்முதல் நிலையத்திற்கு அதிகாரிகள் அனுமதி தராததால் நெல்களை அள்ளிச் செல்ல முடியாமல் இரவு பகலாக பாதுகாக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் இதனால் நெல் எடை குறைந்து உரிய தொகை கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் செல்லம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு விட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் மறியல் செய்த நிலையில் தற்போது சோழவந்தான் பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் பல்வேறு பகுதிகளில் நெல் குவியல்கள் கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ள காட்சி வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

You must be logged in to post a comment.