மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரிசன் தெருவில் ஆதிதிராவிடஎ மக்களுக்கு சொந்தமான உஜ்ஜியினி மகா காளியம்மன் கோவில்.இக்கோவிலில் வடக்கு தெரு மக்கள்; வழிபாடு செய்து வந்துள்ளனர்.தெற்கு தெரு மக்களும் தனியாக கோவில் கட்டி வழிபாடு செய்துள்ளனர்.இதில்; வடக்கு தெரு கோவில் அருகில் அரசு புறம்போக்கு காலியிடம் உள்ளது. இதில் வடக்கு தெரு மக்கள் பொங்கல் வைப்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தெற்குத் தெரு மக்கள் கோவில் காலியிடத்தில் கட்டிடம் கட்ட முயற்ச்சித்து இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டு கோவில் மூடப்பட்டுள்ளது.பின்னர் வடக்குத்தெரு பலகட்ட முயற்ச்சிகளுக்குப்பின் பேரையூர் வட்டாச்சியர் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்று கடந்த ஜீன் மாதம் கோவில் திறக்கப்பட்டு வழிபாடு மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில் தெற்குத்தெரு மக்கள் அனுமதியின்றி அத்திமீறி கோவில் காலியிடத்தில் கட்டிடம் கட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.அரசு அனுமதியின்றி காலியிடத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எழுமலை அரிசன் தெரு வடக்குத்தெருவைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.பெண்கள் கூட்டத்தை பார்த்த டிஎஸ்பி சந்திரசேகர் அவர்களை அழைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது,

You must be logged in to post a comment.