மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த பகுதியில் தபால் நிலையம் மற்றும் வாடிப்பட்டியில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது சிறிய மழை பெய்தாலே இங்குள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக மாறிவிடுகிறது இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தபால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் நேற்று பெய்த சிறிய மலைக்கு வங்கியின் முன்பு மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வங்கி முன்பு மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.