மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள் பட்டி கீழப்பெருமாள்பட்டி தெப்பத்துப்பட்டி அரசமரத்துப்பட்டி பாணா முப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப்பூ விவசாயம் நடைபெற்று வருகிறது நோய் தாக்குதல் காரணமாக மல்லிகை பூக்கள் அரும்பில் கருகி விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் குறிப்பாக மல்லிகை பூக்கள் அரும்பு விட்டு பின்பு மலர்ந்து பயன் தரக்கூடிய நிலையில் அரும்பாகும் நிலையில் நோய் தாக்குவதால் அரும்புகள் கீழே உதிர்ந்து விளைச்சல் குறைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் வேளாண்மை துறை அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள மல்லிகை செடிகளை ஆய்வு செய்து மல்லிகை பூ அரும்புகளை தாக்கும் நோய்களை கண்டறிந்து உரிய மருந்துகளை அடிப்பதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் மல்லிகை விவசாயத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.