உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன்-ரீனா தம்பதியினர். இவர்களின் மகள் லோகிதா வயது 2½. இவருக்கு இவரது பாட்டி பழனியம்மாள் சிறு வயது முதலே யோகாசனம் கற்றுக் கொடுத்து வருகின்றார். இதனால் லோகிதா தான் பிறந்த ஆறாவது மாதத்திலேயே யோகாசனம் செய்து மத்திய அரசின் சான்றிதழை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ஆறாவது மாதத்திலிருந்து தற்போது வரை தினந்தோறும் லோகிதா யோகா மற்றும் தியான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. பிரபு தற்போது இரண்டரை வயதான நிலையில் இவரை பல்வேறு யோகாசனத்தில் பல தேசிய,சர்வதேச யோகா விருதுகளை பெற்றுள்ளார். லோகிதா யோகா செய்யும் செய்யும் காட்சி யோகா தினத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. லோகிதாவின் தம்பியான நான்கு மாத ஆண் குழந்தை டியாஸ்வன் தற்போதே யோகா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.