மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டார்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், அவர் மீண்டும் முதல்ராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு நாட்டார்பட்டியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு எஸ்.எஸ்.ஐ பதவி உயர்வு வழங்குவதில் 23 ஆண்டுகளாக குறைத்தோடு மட்டுமல்லாது 2010 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் என அறிவித்தது குறித்த கேள்விக்கு.,
திமுக அரசில் எந்த அறிவிப்பும் முழுமையாக உரியவர்களுக்கு போய் சேராது, காவல்துறையினருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் அப்படி தான், அதே போல ஓய்வூதிய பலன் அறிவிக்கம் போதும் தான் எதை அறிவித்தாலும் வரும் ஆனா வராது அந்த மாதிரி தான் அறிவிப்பார்கள்., திட்டங்களை கொடுப்பார்கள், சொல்லுவார்கள் செயல்படுத்த மாட்டார்கள்.,
நிச்சயமாக காவல்துறையை மதிக்கின்ற ஒரு இயக்கம் அதிமுக, அரசு அம்மாவின் அரசு, எங்களுக்கும் பலதரப்பில் இருந்து கோரிக்கையாக வந்துள்ளது.,
ஒரு சலுகையோ அல்லது உரிமையையோ நாம் அறிவிக்கும் போது இப்போது இருந்து தான் கொடுக்க முடியும், அப்போது இருந்து தான் கொடுக்க முடியும் என்று சொன்னால் பாரபட்சமான ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.,
ஆகவே இதை தளர்த்தி அனைவருக்கும் கிடைக்கும் படி செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர் காவல்துறையை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளுக்கு இணையான காவல்துறையாக வழிநடத்திய எடப்பாடியார் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என பேட்டியளித்தார்.,
You must be logged in to post a comment.