மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் கலைமாமணி சங்கீத சாம்ராஜ் இயல் இசை நாடக சக்கரவர்த்தியும் திரைப்பட நடிகருமான டி ஆர் மகாலிங்கத்தின் 101வது பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அவரது பேரனும் நாடக நடிகருமான டி ஆர் எம் எஸ் ராஜேஷ் மற்றும் குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது இரவுநாடகம் நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி கே கோபாலன் மருத்துவர் மோகன், சோழவந்தான் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பாலசுப்ரமணியன் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா,பங்களா மூர்த்தி, திருச்சி நாடக நடிகர் சங்க நிர்வாகிகள் பாரிஸ் நாகராஜன், நாகசிங்கம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஜோதிமணி, தொழிலதிபர் தியாகராஜன், சோழவந்தான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம் கே முருகேசன் மற்றும் டி ஆர் மகாலிங்கத்தின் ரசிகர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.