மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வணங்காமுடி இவர் தனது கடையில் கண் காணிப்பு கேமரா மூலம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை எடுத்து சமூக வலைதளம் மற்றும் செய்தியாளர்களுக்கு பகிர்ந்து வருவது தினசரி வாடிக்கையாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில்
சில தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்திற்குள் வந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் செல்லாமல் உடனே பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளது இதனை வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டார் மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார் இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு வந்த ஓட்டுநர் செல்போன் கடையின்
உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
மேலும் ஓட்டுனர் போதையில் பேருந்தை ஓட்டத்தான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் நீ ஏன் வீடியோ எடுக்கிறாய் நீ போலீசா இதேபோல் தினமும் செய்தால் உன் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது என்ற தோணியில் மிரட்டல் விடுத்து பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது
பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உதவி செய்து வரும் சமூக ஆர்வலரை பாராட்ட மனது வரவில்லை என்றாலும் இதுபோன்று கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
You must be logged in to post a comment.