தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வி. விருமாண்டி தலைமையில் விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் அஜய் பாண்டி, தாலுகா செயலாளர்கள் சாத்தப்பன், நாகராஜ், பெத்தணசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்ட விளக்கவுரை யாக மதுரை மாவட்டம் தலைவர் ஜோதி ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சந்தானம் உசிலம்பட்டி தாலுகா செயலாளர் தங்கமலை எஐடியூசி மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் இராஜா வீ இராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையாக 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கு வேலை நாட்கள் 200 நாட்களாக உயர்த்தி சம்பளம் தினசரி ரூபாய் 336யை உறுதிப்படுத்து. ஒன்றிய மத்திய அரசை 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கும் நிதியை குறைக்காதே வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டா உடனே வழங்கிடு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் பாண்டியராஜபுரம் மூடிய சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடு 58 கால் வாய்க்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடியாக உயர்த்தி நடவடிக்கை எடுக்கவும் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலைய வேலையை விரைவாக முடிக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்து பேசினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!