மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை பாலத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் சென்ற அரசு பேருந்து இரவு 9 மணிக்கு மேல் திடீரென பழுதாகி நின்றதால் அதில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் குறிப்பாக இரவு பணி முடித்து வீட்டுக்கு சென்றவர்கள் மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் உறவினர் வீடுகளுக்கு சென்று தங்களின் சொந்த அவர்களுக்கு திரும்பியவர்கள் என 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் ஒன்பது மணி அளவில் பழுதாகி நின்ற பேருந்து சுமார் 45 நிமிடங்கள் அந்த வழித்தடத்தில் வேறு பேருந்துகள் வராத நிலையில் அடுத்த பேருந்துக்காக இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தது பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது குறிப்பாக சோழவந்தான் செக்கானூரணி திருமங்கலம் மற்றும் சோழவந்தான் மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகள் பராமரிக்கப்படாத நிலையில் திடீரென பழுதாகி நின்று விடுவதால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கீழே இறங்கி அடுத்த பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆகையால் தமிழக போக்குவரத்துக் கழகம் பழுதடைந்த பேருந்துகளை இயக்குவதை நிறுத்தி அந்த வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் மேலும் பழுதடைந்த பேருந்துகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகளை அனுப்பி பயணிகள் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.