சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 17ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது தேரோட்ட நிகழ்ச்சியானது பெரிய கடைவீதியில் ஆரம்பித்து தெற்க்ரத வீதி மேல ரத வீதி வடக்கு ரதவீதி திரௌபதி அம்மன் கோவில் தெரு, முத்துக்குமரன் நகை மாளிகை வழியாக தேர் நிலைக்கு வரும் இந்த நிலையில் திரௌபதி அம்மன் கோவில் தெரு, முத்துக்குமரன் நகை மாளிகை அருகில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது ஏற்பட்ட பள்ளத்தை தற்போது வரை சரி செய்யப்படவில்லை சென்ற ஆண்டு இந்த இடத்தில் தேர் வந்த போது சுமார் ஒரு மணி நேரம் தேரை கொண்டு செல்ல பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர் குறிப்பாக காவலர் ஒருவர் இந்த கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த ஆண்டும் இந்த பள்ளத்தை சரி செய்யாமல் உள்ள நிலையில் தேரோட்டம் நடைபெறும் சமயத்தில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் அதிகாரிகள் தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் தேரோட்டம் நடைபெறுவதற்கு உரிய பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!