மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூன்றாம் நாள் பெருந்திருவிழாவில் மண்டகப்படி தாரார்கள் சுப்பையா முதலியார் அண்ட் சன்ஸ் தாண்டவன் முதலியார் அண்ட் சன்ஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் அம்மன் யாளி வாகனத்தில் திருவீதி உலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

You must be logged in to post a comment.