உசிலம்பட்டியில் முதல் நாள், முதல் வகுப்பில் சேர்ந்த 100 க்கும் அதிகமான மழலைகளுக்கு மலர் மாலை சூடி, இனிப்பு வழங்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்., விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் பள்ளி திறந்த சூழலில், இன்று புதிதாக முதல் வகுப்பில் நண்பகல் 12 மணிக்குள் 100 க்கும் அதிகமான மழலைகள் புதிதாக சேர்ந்துள்ளனர்.,புதிதாக சேர்ந்த இந்த 100 க்கும் அதிகமான மழலைச் செல்வங்களை வரவேற்கும் வண்ணம் அனைத்து மழலைகளுக்கு மலர் மாலை சூட்டி, இனிப்பு வழங்கி பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு மற்றும் ஆசிரியர்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

You must be logged in to post a comment.