மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றுத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் கொடியேற்றம் தொடங்கியவுடன் ஆயிர கணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் பால்குடம் அக்னி சட்டி பூக்குழி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக காப்பு கட்டுவதற்கு கோவில் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்பு மஞ்சள் கயிறுகள் கோவிலில் பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு உள்ளது இரவு 7 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றவுடன் இரவு முழுவதும் பக்தர்கள் காப்பு காட்டுவார்கள் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவு பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது ஆகையால் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் சுகாதார மற்றும் குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளை போதிய அளவில் செய்து தர வேண்டும் காவல்துறையினர் வழக்கத்தைவிட அதிக அளவில் பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒருவழி பாதையாக்கி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் சிரமங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது

You must be logged in to post a comment.