கருமாத்தூர் அருகே கேசவம்பட்டியல் சுமார் 15 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் விலை இல்லாததால் நிலத்திலேயே அழிப்பு
டிராக்டர் ஆட்டோ இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்கள் தர்பூசணி பழங்களை அள்ளிச் சென்றனர் கிலோ 5 ரூபாய்க்கு விற்பதால் ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை அரசு நிவாரணம் வழங்க கோரிக்கைமதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே கேசவம்பட்டியில் ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் தர்பூசணி பயிரிடப்பட்டு இருந்தது போதிய விலை கிடைக்காததால் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யாமலேயே வீணானது. ஏக்கருக்கு இரண்டு லட்சம் முதல் செலவு செய்து சுமார் 20 ஏக்கர் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் இதன் மூலம் வீணானது. நன்றாக விலை கிடைத்து விற்பனை செய்திருந்தால் கிலோவுக்கு ரூ- 12 வீதம் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது சுமார் 40 லட்ச ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் விவசாய நிலங்களில் அப்படியே போட்டு விட்டால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்று அருகில் உள்ள கிராமத்தினரை அழைத்து இலவசமாக தர்பூசணி பழங்களை பறிக்க சொல்லி வேண்டுகின்றனர். ஏற்கனவே விவசாயத்தில் பலத்த நஷ்டம் மட்டும் ஏற்பட்டு வரும் நிலையில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யாமல் வீணானது விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்களும் நேரடியாக விசாரணை செய்து தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் தர்பூசணி பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

You must be logged in to post a comment.