மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அலங்காநல்லூர் பேரூர் மற்றும் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் அழகுராஜா வரவேற்புரை ஆற்றினார் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் அதில் வரும் 2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக்க வேண்டும் அதற்காக இரவு பகல் பாராமல் களப்பணி ஆற்ற வேண்டும் இப்போது இருந்து தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன் வடக்கு காளிதாஸ் மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா மகளிர் அணி லட்சுமி நிர்வாகிகள் அம்மா பேரவை வக்கீல் திருப்பதி மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்பி குமார் புதுப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் பி பாண்டுரங்கன் பிரதிநிதி முத்துக்குமார் வாவிட மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு எஸ் கார்த்திக் சந்திர போஸ் ஹரி மற்றும் மாவட்ட பிரதிநிதி முரளி வழக்கறிஞர் அணி குருவித்துறை காசிநாதன் துணைச் செயலாளர்கள் மருதாயி சாந்தி மகாலட்சுமி லதா முரளி பாஸ்கரன்உள்பட நிர்வாகிகளும் அலங்காநல்லூர் பேரூர் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் பிற அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் அலங்காநல்லூர் நிர்வாகிகள் நாட்டாமை சுந்தர் மற்றும் சுந்தர் ராகவன் ஆகியோர் நன்றி கூறினர்

You must be logged in to post a comment.