உசிலம்பட்டியில் இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் கட்சியினர் தமிழக அரசு உசிலம்பட்டி முன்னாள் எம் எல் ஏ பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் உசிலம்பட்டியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அகில இந்தியா பார்வர்டு பிளாக் எம் எல் ஏ மற்றும் முன்னாள் தேசிய தலைவர் பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் மணிமண்டபம் அமைப்பதற்கு அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் உசிலம்பட்டி பழைய அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள அரசினர் மாணவர் விடுதியில் இடம் தேர்வு செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் தலைமையில் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நேதாஜி வழக்கறிஞர் போஸ் அன்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பட பலர் கொண்டனர்.
தமிழக அரசு தேவர் சமுதாய மக்களின் கோரிக்கைகளான டிஎன்டி ஒற்றை சான்றிதழ், 58 கிராம கால்வாய்க்கு நிரந்தர அரசாணை போன்றவற்றை புறக்கணித்து விட்டு கண்துடைப்பாக மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் என்று அறிவித்துள்ளார் எனவும், உசிலம்பட்டி பழைய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் பி கே மூக்கையா தேவர் மணிமண்டபம் அமைந்தால் போக்குவரத்து வசதிகள் மற்றும் மாணவர்கள் கல்வியை பாதிக்க கூடும் எனவும் மானியம் மண்டபம் காட்டுவதாக இருந்தால் சென்னையிலோ ,செக்காணுரனியிலோ கட்டலாம் எனத் தெரிவித்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.