தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மழையினால் பாதிக்கப்பட்ட சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் நேரில் ஆய்வு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது கோவை மாவட்டம் சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த முத்தம்மாள் என்பவர் வீடு மழையினால் பாதிக்கப்பட்டது முத்தம்மாள் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இவர் வீடு மழையால் பாதிக்கப்பட்டது இந்நிலையில் பல்வேறு கட்ட பணி மற்றும் பேரிடர் கலாய்வுக்காக கோவை வந்த தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறுமுகையில் முத்தம்மாள் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வீடு கட்டித் தர உத்தரவிட்டார் மேலும் முத்தம்மாள்க்கு நிவாரண பொருட்களை வழங்கினார் மற்றும் சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் கனீஷ் என்பவரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் லிங்காபுரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை பாரட்டி ஊக்கத் தொகை வழங்கினார் இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ. அ. இரவி ,காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம் ,தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் ,சிறுமுகை பேரூர் கழகச் செயலாளர் உதயகுமார் சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார் துணைத் தலைவர் செந்தில்குமார் அரசு அதிகாரிகள் தி.மு.கவினர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!