மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவில் சுற்றி வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய நமச்சிவாயா என்று வலம் வந்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ ஏற்பாடுகளை பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி முத்தையா எம் வி எம் கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில் தாளாளர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர்கள் செய்திருந்தனர்

You must be logged in to post a comment.