மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் அதற்கான கொட்டகை முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று காலை 7 மணி அளவில் கோவில் முன்பு நடைபெற்றது முன்னதாக கோவிலில் இருந்து அர்ச்சகர் சண்முகவேல் பூஜை பொருட்களை கொண்டு வந்தார் தொடர்ந்து முகூர்த்த காலுக்கான பணிகள் நடைபெற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் செயல் அலுவலர் இளமதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் கவுன்சிலர்கள் குருசாமி கொத்தாலம் செந்தில் வேல் பிற்பட்டோர் நல வாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி செங்குட்டுவன் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து ஜெனகை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

You must be logged in to post a comment.