வாக்குசாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி ஒன்றிய அ தி மு க கழகம் சார்பில் இடையபட்டி , பெருமாள் கோவில் பட்டி, உத்தப்பநாயக்கனூர் , நல்லுத்தேவன்பட்டி , எருமார்பட்டி ஆகிய கிராமங்களில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் தலைமையில் வாக்குசாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எம் ஜி ஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் தண்டலை மனோகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி நீதிபதி மாநில அமைப்பு செயலாளர் இ. மகேந்திரன் முன்னிலையில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் துரை தனராஜன் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி எம் ஜி ஆர் மன்ற ராமகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மாணவர் அணி மகேந்திரபாண்டி பாசறை செயலாளர் இளஞ்செழியன் ஒன்றிய இணைச் செயலாளர் செல்வராஜ் இலக்கிய அணி ரகு, சிவசக்தி கிளைச் செயலாளர்கள் சந்திரசேகர் பெரிய கருப்பன் சுப்பிரமணி சுரேஷ் குமார் பெருமாள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சாவடிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகள் இடம் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!