மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.,
தற்போது 90 ஆண்டை கடந்த நிலையில் 90வது ஆண்டு விழா இன்று பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்டது.,

இந்த விழாவில் கடந்த 90 ஆண்டுகளில் இப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் பணியாற்றிய ஆசிரியர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு கேடையங்களை வழங்கி வாழ்த்து பெற்றனர்.,
தொடர்ந்து ஆண்டு விழாவில் முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்த சூழலில், நீதிபதிகள், அரசு அலுவலர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களின் மலரும் நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.,
மேலும் 90 வது ஆண்டு விழாவை தொடர்ந்து 100 வது ஆண்டு விழாவை இன்னும் சிறப்பாக நடத்தவும், பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.,