மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால்,தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சுவாமி அம்பாளை தொடர்ந்து சிவ பக்தர்கள் சிவ சிவ என்று பாடி வந்தனர். எம்விஎம் குழுமம்தலைவரும் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில்,டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பக்தர்களுக்கு சனி பிரதோஷ விழா பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் நந்தி பெருமானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம்,பூஜை நடைபெற்று சுவாமி அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி கோவிலிலும் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும் திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் கோவிலிலும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. சோழவந்தான் மற்றும் காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்து இருந்தனர்.

You must be logged in to post a comment.