இயக்குனர் பாரதிராஜா வின் படங்கள், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் உயிரிழந்தார்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி., 73 வயதான இவர் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி அந்த சீரியல் துவங்கி பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.,
தண்டட்டியுடன் காணப்படும் இந்த மூதாட்டி,
நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய் ன் வில்லு உள்ளிட்ட படங்கள் முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.,
இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி நடித்த இவர் உடல்நல குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை, இந்நிலையில் இன்று தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்., இவருக்கு ஒரு மகனும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளன.,
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.,