மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் 2.5.25 மற்றும் 3.5.25 ஆகிய இரண்டு நாட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள் தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர் தங்கள் நிறுவனங்களின் முன்பு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தால் தாங்களாகவே அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தடுக்கும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் ஆகையால் பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது
