தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கீழ மாத்தூர் ஊராட்சியின் 5 வது வார்டு ஆதிதிராவிடப் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்லாமல் தேங்கி இருப்பதாகவும் மேலும் 200 குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்களுக்கு இதுவரை கழிப்பறை வசதி கூட கட்டித்தரவல்லை எனக்கூறி திருப்பரங்குன்றம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் அவர்களை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளிடத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டாம் ரத்து செய்துவிட்டு கிளம்புங்கள் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது
கீழ மாத்தூர்ஊராட்சி 5வது வார்டில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்றனர் இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கழிப்பறை வசதி கட்டி தராததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கடந்த கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் சரமரியாத கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால்
இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை முற்று கையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் கழிப்பறை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் ஆனால் இதனை ஏற்காத கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு கிராம சபை கூட்டமே வேண்டாம் ஆகையால் கூட்டத்தை நடத்த வேண்டாம் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனால் கிராம சபை கூட்டத்தை முடிக்காமல் பாதியிலேயே அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர் கிராம சபை கூட்டம் பாதியில் முடிந்ததால் அந்த பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது