மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திரு மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சாமி திருவீதி உலா வரும் சப்பர தேருக்கும் அபிஷேகம் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும் திருத்தேர் ஊர்வலம் 9ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும் ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் தென்கரை கிராமத்தினர் செய்து வருகின்றனர்
