மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கான மாற்றுத் திறனாளிகள் புதிய அட்டை பதிவு மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரண உதவி தொகைக்கான மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான முகாம் இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இதற்காக காலை 8 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு திரண்டனர் முகாமை துவக்கி வைக்க வேண்டிய அதிகாரிகளும் காலை 9.30 மணிக்கு பள்ளி முன்பு வந்தனர் முகாமுக்கு இடம் கொடுத்து நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் திடீரென முகாம் நடத்துவதற்கு அனுமதி தராததாலும் மேலும் தலைமை ஆசிரியர் வராததாலும் பள்ளி மெயின் கோட்டை திறக்க முடியாமல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பள்ளிவாயலில் மாற்றுத்திறனாளிகள் உள்பட அதிகாரிகள் காத்திருந்த அவலம் அரங்கேறியது
சுமார் 11 மணி ஆகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியை திறக்க முன்வராததால் வேறு வழியின்றி பள்ளியின் பூட்டை உடைத்து முகாமை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் மாற்றுத்திறனாளி முகாமிற்கு இடம் கொடுத்து அனுமதியும் கொடுத்த நிலையில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டு சாவியை தராத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காத்திருந்த அவலம் அலங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது