மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் வேலாயுதம், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்து பெரியதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிற மொழியில் பதிவு செய்தால் 5:3:2 என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வர்த்தகர் சங்க தலைவர் ஜவகர் ,செயலாளர் ஆதி பெருமாள் பொருளாளர் கேசவன் மற்றும் வணிக சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் வியாபாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
