மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள தனது நண்பர் முனியாண்டி என்பவர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அதேபகுதியை சேர்ந்த வினோத், மருதுபாண்டி, பாலமுருகன், மணி ஆகிய 4 பேர் கொண்ட கும்பலால் மண் வெட்டியால் சரவண பாண்டியின் தலையில் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இது பற்றி தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பரண்டு ஆனந்தராஜ் போலீஸ இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)ஆனந்த் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணபாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணபாண்டியை எதற்காக கொலை செய்தார்கள் கொள்ளைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

You must be logged in to post a comment.