மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் முனைவர் கல்வியாளர் வேல்முருகன் தலைமையில் ஆசிரியை லயன் அமுதப்பிரியா முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் பொம்மையராஜா தலைமை காவலர் விஜயலட்சுமி மற்றும் மனநல ஆலோசகர் ராஜாராம் ஆகியோர் போக்சோ சட்டம் குழந்தை திருமணம் 1098 குழந்தைகள் பாதுகாப்பு பற்றி எடுத்துக் கூறினார்கள்
கூட்டத்தில் வளர் இளம்பெண்கள் பெற்றோர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் .
நிறைவாக குழந்தைகள் நல ஆலோசகர் சுமா நன்றி கூறினார்கள்.

You must be logged in to post a comment.