மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டபேதார் சந்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அரிச்சந்திரன் (45). இவர் டாட்டா ஏசி வாகனத்தில் குடிநீர் விற்பனை தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 11:30 மணிக்கு டபேதார்சந்தையில் இருந்து சமயநல்லூர் பர்மா காலனி சடச்சியம்மன் கோவில் தெருவில் விசேச வீட்டிற்கு சென்று வாகனத்திலிருந்து தண்ணீரை மின்மோட்டார் மூலமாக இறக்கும் போது மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த ஹரி கிருஷ்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ரபிக் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

You must be logged in to post a comment.