விக்கிரமங்கலம் டாஸ்மாக்கில் வாடிக்கையாளரை தாக்கிய விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கீழப்பட்டி செல்லும் சாலையில் மலையூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது இந்த கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை தனியாருக்கு மொத்தமாக விற்பதாகவும் மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்கள் இருந்தாலும் அதை தர மறுப்பதாகவும் விற்பனையாளர் பவுன் என்பவர் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது

இந்த நிலையில் நேற்று இரவு விக்கிரமங்கலத்தை சேர்ந்த மோகன் என்பவர் மது வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார் அங்கு சென்று தான் விரும்பி அருந்தும் மதுபானத்தை விற்பனையாளரிடம் கேட்டுள்ளார் அந்த மதுபானம் டாஸ்மாக்கில் இருந்தும் அதை தர மறுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் டாஸ்மாக் முன்பு காக்க வைத்துள்ளார் மேலும் அதே மதுபானத்தை விற்பனையாளருக்கு வேண்டியவர்கள் வந்து கேட்கும் போது கொடுத்துள்ளார் இதனை தட்டி கேட்ட வாடிக்கையாளர் மோகன் என்பவரை தரக்குறைவாக பேசியதுடன் அவரை தாக்க முற்பட்டுள்ளார் விற்பனையாளர் பவுன்.அதிர்ச்சி அடைந்த மோகன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாக கூறியுள்ளார்

மேலும் மோகன் கூறுகையில் அரசு மதுபான கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதாகவும் மற்றவைகளை கடையில் வைத்துக்கொண்டு டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அவதூறாக பேசி இந்த வகை மதுபானம் மட்டும்தான் உள்ளது வேண்டுமென்றால் வாங்கி செல்லுங்கள் இல்லையென்றால் கடையை விட்டு வெளியேறுங்கள் என அவமானப்படுத்தி பேசுவதாகவும் ஆகையால் டாஸ்மாக் மேலாளர் விக்கிரமங்கலம் கீழப்பட்டி ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு அரசு டாஸ்மாக் கொள்முதல் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் மதுபானங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக விற்க படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் தொடர்ந்து வாடிக்கையாளரை அவதூறாக பேசி தாக்க முற்பட்ட விற்பனையாளர் பவுன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு பெருமளவில் நிதியை வழங்கும் அரசு டாஸ்மாக்கில் நடைபெறும் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க வேண்டும் என மது பிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!