மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு கள்ளர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாள் சவால் ஆய்வு நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 100% தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறமை கணிதம் கணக்கிடும் திறமை ஆகியவற்றை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
.இதன் பேரில் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித திறன் ஆகியவற்றில் 100% கற்றிருக்க வேண்டும் கல்வித் துறையினர் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.இதன் அடிப்படையில் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் 1வது முதல் 5ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 100 நாள் சவால் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறன் மற்றும் கணித அடிப்படை திறன் பார்வை மாணவர்களுக்கான ஆய்வு நடந்தது.இதில் செல்லம்பட்டி வட்டார கல்வி அலுவலர் ரெங்கநாயகி,மதுரை கள்ளர் சீரமைப்பு பள்ளி மேற்பார்வையாளர் கலாவதி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு நடந்தது.இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு அரசு வழங்கப்பட்ட அடையாள எண் மற்றும் பெயரை
சரி பார்த்து அரசு கொடுத்துள்ள ஆப் மூலம் மாணவனுடைய பெயரும் அடையாள என்னையும் பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்ட மாணவன் வாசிக்கக்கூடிய தமிழ் ஆங்கிலம் மற்றும் கணக்கு இதில் தெரிகிறது. இதை சம்பந்தப்பட்ட மாணவன் தடையின்றி படித்து கணக்கை சரியாக சொன்னான். இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த5ம் வகுப்பு மாணவ மாணவிகள் சதீஷ, சிவ யாழினி ஆகியோர் இந்த 100 நாள் சவாலில் கலந்து கொண்டு தங்களுடைய கல்வித் திறமையை வெளிக்காட்டினர். மாணவ மாணவிகளை அதிகாரிகள் பாராட்டினர் நிகழ்ச்சியில்தலைமை ஆசிரியை (பொறுப்பு) சுந்தராம்பாள்,உதவி ஆசிரியர்கள் சுதா,ரமணி, ஆசிரியர் பயிற்றுனர் ராஜேஸ்வரி, மேலாண்மை குழு தலைவர் அபிராமி, இல்லம் தேடி கல்வி நந்தினி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தங்களது குழந்தைகள் திக்காமல், எந்தவித தடுமாற்றம் இல்லாமல் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித அடிப்படை திறன் செய்ததை பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
You must be logged in to post a comment.