மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பூக்களால் அலங்காரம் செய்துசிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடை பெற்றது இரவு ஸ்ரீ பாலமுருகன் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர் திருவிழாவில் வெள்ளாளர் முன்னேற்ற சங்க மதுரைமாவட்ட துணைச் செயலாளர் ஞானகுரு இரும்பாடி வெள்ளாளர் முன்னேற்ற கழகம் வ உ சி கிராம நல சங்கம் மற்றும் இரும்பாடி ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்

You must be logged in to post a comment.