மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பொய்கை விநாயகர் கோவிலில் தினசரி அன்னதானத் துவக்கப்பட்டது. சோழவந்தான் திண்டுக்கல் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் முற்காலத்தில் சோழ மன்னர்கள் ராணி மங்கம்மாள் காலத்தில் அன்னதானம் நடைபெற்று வந்தது. தற்போது ராணி மங்கம்மாள் சத்திரம் மேல்நிலைப் பள்ளியாக மாற்றமடைந்து உள்ளது. கோவில் சிதிலம்அடைந்ததன் காரணமாகவும் ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டு அன்னதானம் நாளடைவில் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தினசரி அன்னதானம் துவக்கப்பட்டது. தினசரி மதியம் ஒரு மணி அளவில் திருக்கோவில் முன்பாக அட்சயா டிரஸ்ட் மூலமாக அன்னதானம் வழங்கப்படும்.

You must be logged in to post a comment.