மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான விஷயங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி மற்றும் செண்பகம் பிள்ளை முத்துப்பிள்ளை வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.

You must be logged in to post a comment.