சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் அழகப்பா பூங்கா பின்புறம் அமைந்துள்ள பகத்சிங் மணி மண்டபத்தில் விடுதலை வீரர் கே எம் எஸ் சிந்தனை சோலையில் 102 வது மாதக் கூட்டம் முனைவர் ச ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது சிந்தனைச் சோலையின் நிறுவனர் தெய்வசிகாமணி வரவேற்புரை நிகழ்த்தினார் ,முனைவர் பெளலியன்ஸ் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார் , நிகழ்ச்சிகளை சிந்தனை சோலை துணைச் செயலாளர் செல்வம் நன்றியுரை வழங்கினார், திண்டுக்கல் லீலா கலை மற்றும் விளையாட்டு குழுமம் சார்பில் பல்துறை சாதனையாளர்களை பாராட்டி லீலா கலை ரத்னா விருது அறிவித்திருந்தது அதனை ஆனந்தா கல்லூரியில் முதல்வர் ஜான் வசந்தகுமாரிடம் KMS சிந்தனைச் சோலை நிறுவுநர் தெய்வசிகாமணி பெற்றுக்கொண்டார் ,இந்நிகழ்ச்சியில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.