அலங்காநல்லூர் அதிமுக மாவட்ட பிரதிநிதி முரளியின் தாயார மறைந்த 30 வது நாள் நினைவு நாளை யொட்டி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் நேரில் சென்று மரியாதை

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அலங்காநல்லூர் ஒன்றிய அலங்கா நல்லூர் பேரூர் கழக மாவட்டபிரதிநிதி அலங்கை முரளியின் தாயார் சரோஜா அம்மாள் கடந்த17.03.25 அன்று இயற்கை எய்தினார் முரளியின் தாயார் சரோஜாவின் 30 வது நாள் நினைவு நாளை ஒட்டி
மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளியின் இல்லத்திற்கு வருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் சரோஜாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் பின்னர் மாவட்ட பிரதிநிதி முரளி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராமகிருஷ்ணன், சோழவந்தான் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் எம் வி கருப்பையா .மாணிக்கம்,அம்மா பேரவை செயலாளர் ராஜேஷ் கண்ணா,அலங்காநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திரமணியன், விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிடமருதூர் .RP. குமார் உள்பட அதிமுகவினர் உடன் இருந்தனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!