மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஸ்ரீ முனியாண்டி சாமி கன்னிமார் தெய்வம் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனர் நேற்று இரவு கிராமத்தின் அருகில் உள்ள ஆற்றப்பகுதியில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர் பின்னர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை நடைபெற்றது இதில்பொம்ம்ன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமி ஆடி நேர்த்திக்கடன் செலுத்தினர் நள்ளிரவு ஒரு மணி அளவில் சக்தி கிடா வெட்டி முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர் இன்று காலை பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்

You must be logged in to post a comment.