சோழவந்தானில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியீடு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் அஜித் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே திரையிடப்பட்டது முன்னதாக காலை 8 மணி முதலே நூற்றுக்கு மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரையரங்கு இருந்த சாலையில் குவிய துவங்கினர் சாலையில் சென்ற பேருந்துகளை வழிமறித்தும் போக்குவரத்தை நிறுத்தியும் குத்தாட்டம் போட்டு தங்கள் உற்சாகத்தை கொண்டாடினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாட்டத்துடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தியேட்டருக்கு பட்டாசுகள் வெடித்து மேல தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர் ட்ரம் செட் வைத்து கலர் பொடிகளையும் கலர் பேப்பர்களையும் தூவி ஆரவாரம் செய்தனர். அவரது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தனர் திரையரங்கு முன்பாக ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் படம் திரையிடப்பட்டவுடன் தியேட்டரின் உள்ளே கலர் பொடிகளை தூவியும் விசில் அடித்தும் ஆரவாரப்படுத்தினர் விடுமுறை தினமான இன்று தியேட்டரில் அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து திரைப்படத்தை கண்டு ரசித்தனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!