சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வரை புதிதாக சுமார் 2 கோடி செலவில் ரோடு போடப்பட்டுள்ளது இந்த ரோடு சுமார் 20 நாட்களுக்கு முன்பாக போடப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய்க்காக சாலையில் தோன்றிய பள்ளங்களை சரிவளர் மூடாமல் விட்டுச் சென்றதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் குறிப்பாக மலையூர் கிராமப் பகுதியில் சாலைகளில் ஆளை விழுங்கும் பள்ளங்கள் ஏற்பட்டு சாலையில் செல்வோர் அடிக்கடி விபத்தில் ஏற்படும் அபாயம் நடைபெறுகிறது மேலும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து செல்லும் ஆபத்தான நிலை ஏற்பட்டு வருகிறது
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் பொழுது ரெண்டு வாரத்துக்கு முன்பாக இந்த ரோடு போடப்பட்டதாகவும் இந்த ரோட்டின் ஓரமாக குடிநீர் குழாய் பதித்து வந்த பொழுது குடிநீர் குழாய் பதித்த பிறகு ரோடு போடும்படி கேட்டுக் கொண்டதாகவும் ரோடு போடுபவர்கள் இதை அலட்சியமாக எடுத்து குடிநீர் குழாய் பதித்து முறையாக மூடுவதற்குள் ரோடு போட்டதால் ரோட்டின் இருபுறமும் பள்ளங்கள் ஏற்பட்டு தரமான முறையில் ரோடு போடாதால் ரோடுகள் சேதம் அடைந்துள்ளது என்று தெரிவித்தனர் இந்த பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளதால் மாலை நேரங்களில் மது பிரியர்கள் அதிக அளவில் வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.