இது குறித்து டிஎன்டி மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவதுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் தாங்கள் விதி 110 படி கடந்த வாரம் சட்டசபையில் கல்வித்தந்தை பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்தீர்கள்,தமிழக அரசின் எண்ணத்திற்கும் பி.கே. முக்கிய தேவர் மீது தாங்கள் வைத்துள்ள அபிமானத்திற்கும் மிக்க நன்றி,
கல்வித்தந்தை மூக்கையா தேவரின் கனவு இச்சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்பது மட்டுமே, அதைப் பெற்றுத்தர அவரது காலத்தில் இச்சமுதாய மக்களால் நிதியளிக்கப்பட்டு மூன்று கல்லூரிகளை அவர் தமிழகத்தில் நிறுவினார்,அதன் பொருட்டு நாங்கள் அவருக்கு ஏற்கனவே உசிலம்பட்டி PMT கல்லூரியில் மணிமண்டபம் வைத்துள்ளோம் ,சிலையும் வைத்துள்ளோம், அவருடைய சொந்த ஊர் பாப்பாபட்டியிலும் சிலையும் வைத்து போற்றி வணங்கி வருகிறோம்,
இப்பொழுது இன்றைய காலகட்டத்தில் இப்பகுதி மக்கள் முன்னேறுவதற்கு கல்விதான்ஆ முதன்மை ,எனவே இப்பகுதி மக்கள் பெரும்பாலும் சட்டத்தை விரும்பிப் படிக்கின்றனர்,அதற்கான வாய்ப்பு இல்லை,எனவே இந்த உசிலம்பட்டி கல்வி வளாகத்தில் தாங்கள் சட்டக் கல்லூரி அமைக்க ஆணையிடுமாறும்,
அப்படி பெறப்பட்ட கல்வி மூலம் வேலை வாய்ப்பு பெறஏற்கனவே தாங்கள் 2021 தேர்தல் பரப்புரையிலும் 16/ 3/2024 அன்று தாங்கள் அறிவித்த ஆணையிட்ட சீர் மரபிணருக்கு ஒரே சாதி சான்றிதழ் ஆணையைவெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்,
அனைத்து சமுதாய மக்கள் சங்க, கட்சித் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
You must be logged in to post a comment.